logo
கோபிச்செட்டிபாளைத்தில்  தண்ணீர் குடத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த  சுயேட்சை வேட்பாளர்

கோபிச்செட்டிபாளைத்தில் தண்ணீர் குடத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

16/Mar/2021 06:13:50

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளைத்தில்  தண்ணீர் குடத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த  சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மற்றும் கோவைமாவட்டமக்களின்  நீண்டநாள் கோரிக்கையான  பாண்டியாறு - புன்னம்புழா நீர் மின் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் குமார் என்ற இரும்புபட்டரை தொழிலாளி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பேருந்து நிலையத்திலிருந்து தண்ணீர் குடத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள சிறுவலூரை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள இரும்புபட்டரை ஒன்றில்  தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில்  பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தைநிறைவேற்ற கோரி  திருப்பூர் தொகுதியில் போட்டிட்டு 1400 வாக்குகளை பெற்றார்.

 எதிர் வரும் சட்டமன்ற தேர்தலிலும்  அதே கோரிக்கையைநிறைவேற்ற வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம்சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியி டுகிறார். இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத் திலிருந்து தலையில் தண்ணீர் குடத்துடன் இரு சிறுவர்களுடன்  நடைபயணமாக சென்று கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவியிடம்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

 சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய நடைபயணமாக சென்றதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். தண்ணீர் குடத்துடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தலையில் சுமந்துவந்ததண்ணீர் குடத்தை 200 மீட்டருக்கு முன்பு இறக்கி வைத்து விட்டுவேட்பு மனுதாக்கல் செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் சென்றார். 

பண்டியாறு-புன்னம்புழா திட்டம் நிறைவேற்றக் கோரிபல தேர்தல்களில் சுயேட்சையாக இந்த தொழிலாளி குமார் போட்டியிட்டதும்,  சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்று திரும்பியவர்  என்பதும் குறிப்பிடதக்கது.

Top