logo
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் நகல் எரிப்புப் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் நகல் எரிப்புப் போராட்டம்

06/Jun/2021 10:56:02

புதுக்கோட்டை, ஜூன்:  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதக்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் .ராமையன் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.ராஜேந்திரன், வி.ரெத்தினவேல், .அரசப்பன், வைரமூர்த்தி, வெள்ளைச்சாமி, ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரிமளத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பி.ஆவுடைமுத்து தலைமை வகித்தார். விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

நிர்வாகிகள் ஜி.நாகராஜன், ஆர்.வி.ராமையா, .மணி, மாணிக்கம், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குன்றாண்டார்கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு விச மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பீமராஜ் தலைமை வகித்தார். கே.தங்கவேல், எஸ்.பீமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கறம்பக்குடியில் விச ஒன்றியச் செயலாளர் மாதவன் தலைமை வகித்தாhர். நிர்வாகிகள் .அன்பழகன், வீரமுத்து, பழனியப்பன், சாமியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விச நிர்வாகி சி.பழனிவேல் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் எல்.வடிவேல், .ஆர்.பாலசுப்பிரமணியன், என்.தமிழரசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னவாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். எம்.ஆர்.சுப்பையா, ஆர்.சி.ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top