logo
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை நாளை ஈரோடு வருகை

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை நாளை ஈரோடு வருகை

26/Sep/2020 04:40:37

ஈரோடு:பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மாற்றத்தை நோக்கி என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வடக்கு மாவட்டம்  பாஜக சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து நாளை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெருந்துறை சாலையில்ல் உள்ள ஆலயமணி மஹாலில் 1 மணி அளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து மூன்று மணி அளவில் ஹோட்டல் அமுதபவனில் நடைபெறும் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் மாணிக்கம்பாளையம் பகுதியில் நெசவாளர்கள் அணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முன்னதாக 12.30 மணி அளவில் சோலார் பகுதியில் வைத்து மாநில துணைத்தலைவர் அண்ணாமலைக்கு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது

Top