logo
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி -கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி -கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

25/Feb/2021 10:10:02

புதுக்கோட்டை, பிப்:  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டி்யிடும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு  அயராது  பாடுபட்டு புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள 6 தொகுதிகளிலும்  அதிக வாக்குகள் தேசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டு மென அக்கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம்  அணவயல் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஆலங்குடி தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்வதற்கு அயராது பாடுபட வேண்டும்.


 மேலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அயராது பாடுபட்டு வெற்றி வாய்ப்பினை பெற்று தர வேண்டும். நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாக அறிவித்த பிறகும்  அங்கு தோண் டப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இன்னும் மூடப்படாமல் இருப்பதால் அதனை அடியோடு அகற்றப்பட வேண்டும் .

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி , சுரேஷ். ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் துரைராஜன். ஆலங்குடி நகரச் செயலாளர் நடராஜன்.இளைஞரணி செயலாளர் வீர கமலநாதன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top