logo
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

12/Mar/2021 06:47:28

சென்னை, மார்ச்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல்  இன்று தொடங்குகிறது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தமிழகத்தில் 234  தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் அனைத்துக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பிப்ரவரி 26-ந் தேதி முதல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ளன.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதில் அன்னைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.மார்ச் 13, 14 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலாது.வரும் 19-ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20-ல் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்..

வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.மார்ச் 22 மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களுடன் 2 பேர் மட்டுமே செல்ல முடியும்.முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Top