logo
திமுக வேட்பாளா் பட்டியலை  இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளா் பட்டியலை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

11/Mar/2021 10:11:52

சென்னை: திமுகவின் வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழா் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகள் போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட உள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிடுகிறார். முன்னதாக, திமுக வேட்பாளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இறுதி  முடிவு எட்டப்படாததால்  (மாா்ச் 11) வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

Top