logo
உலக மகளிர் தினத்தையொட்டி  திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் விருதுகள், நலத்திட்ட உதவிகள் அளிப்பு

உலக மகளிர் தினத்தையொட்டி திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் விருதுகள், நலத்திட்ட உதவிகள் அளிப்பு

10/Mar/2021 11:45:59


புதுக்கோட்டை, மார்ச் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின் விழாவில் விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. 


திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்  சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். இராஜேந்திரன் பங்கேற்று  சிறப்பாக பணியாற்றிவரும்  மகளிருக்கு  ஆதீனத்தின் சார்பில்    விருதுகள்  வழங்கி   மற்றும்  தையல் இயந்திரத்தையும் வழங்கி வாழ்த்திப் பேசினார்.


இதில் அவர்  பேசியதாவது: நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஜனநாயகநாடாக  அனைவராலும் அறியப்பட்ட  இங்கிலாந்து நாட்டிலேயே, கடந்த 1919 -ஆம்ஆண்டிலேதான்பெண்களுக்குஓட்டுரிமை   வழங்கப்பட்டது. அதுவும் 30 வயதிற்கு மேற்பட்டவருக்குதான் வழங்கினார்கள்.  அத்தகைய  சூழலில் வாழ்ந்து  வந்த பெணணிஹம் இன்று பல்வேறு தடைகளை கடந்து அறிவாற்றலிலும், சிந்தனை வளத்திலும்  ஆண்களுக்கு  நிகராக வளர்ந்து உயர்ந்துள்ளனர்  என்பது பாராட்டுக்குரியது. 


 அண்மையில்,  நமது நாட்டிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று விட்டு, மீண்டும் இந்தியவிற்கு விமானத்தை  செலுத்தியவர்கள்  பணிப்பெண்கள்  உள்ளிட்ட அனைவருமே பெண்கள்தான்.  பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.   கல்வித்துறை அலுவல் காரணமாக அடிக்கடி தில்லி சென்று வருவது வழக்கம்.  அவ்வாறு செல்லும்போது, விமானத்தில் பயணம்  செய்யும்போது, விமானி, இணை விமானி பெயர்களை கூறுவார்கள். ஒரு முறை செல்லும் போது, பெண் விமானி பத்மினி என்றும் இணை விமானி  இன்னொரு பெண் பெயரையும் தெரிவித்தார்கள்.


 உணமையிலேயே, அந்த பெண் விமானத்தை தரையிரக்கம் செய்யும்போது  எவ்விதமாக  தரையிரங்கியது  என்பதே தெரியாத வகையில்  திறமையாக   இறக்கம்செய்வார்.  இதுபோன்று வெளிநாட்டில் இறக்கம் செய்தால் விமானத்திலிருப்பவர்கள் அனைவரும்    எழுந்துநின்று  கைதட்டி  மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.  அன்றும்  வெளிநாட்டினர் சிலர் அந்த விமானத்தில்  பயணம் செய்தமையால்  அவர்கள் மட்டும்  எழுந்து கைதட்டினார்கள்.  

இதைகூற   காரணம் என்னவெனில், எடுத்துக் கொண்ட பணியினை   சிறப்பாக  செய்யக் கூடியவர்கள்  பெண்கள் என்பதற்காகத்தான்.  செவ்வாய் கிரகத்திற்கு அண்மையில் அனுப்பட்ட விண்வெளி ராக்கேட் பெர்சிவரன்ஸ் எனும் விண்கலத்தை நாசா அனுப்பியது.  அதன் இயக்குநர் ஒரு பெண்மணி அதுவும் இந்திய வம்சாவளி பெண் என்பது கூடுதல் செய்தி. இத்தகைய சூழலுக்கு வித்திட்டது கல்விதான்.  

அறியாமையை      அகற்றும் கருவியாக கல்வியினை கற்றுவிட்டால் அச்சமுதாயம் உலகத்தில்உயர்ந்து  சிறக்கும். அதுவும் பெண்கள் படித்து உயர்ந்தால் அந்நாடு வளமிக்க நாடாக உயரும்.  70 ஆண்டு கால விடுதலைக்கு பிறகு நமது ஜி.இ.ஆர்  26.0% விழுக்காடு,  அதஹை 50% விழுக்காடாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதனை எட்டிவிட்டால்  மக்களுக்கும், நாட்டிற்கும் பெரும் பயனைஅளிக்கும்என்பது  நிச்சயம்.

கடந்த முறை நடந்த உலக மகளிர் தினவிழாவிற்கு  அழைத்தபோது,  வருவதாக இருந்தும், தவிர்க்க இயலாத காரணத்தால் புதுதில்லி செல்லவேண்டியதாகிவிட்டது.  அதன் பின்னரும் திருமுறை மாநாட்டிற்கு அழைத்தபோதும் வர முடியவில்லை.  இம்முறை அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று இங்கு இப்பொழுது வந்துள்ளேன்.  ஆதீனகர்த்தர் தயானந்த சுவாமிகள் சிறப்பாக முறையில்   செய்ய  வேண்டிய பணிகளை பாங்குடன் செய்து வருவது பாராட்டுக்குரியது. போற்றுதலுக்குரியது.

  நமது இந்திய முதல் பெண் மருத்துவராக திகழ்ந்த டாக்டர் முத்துலட்சுமிஅவர்களின் பணி பெண்ணினத்திற்கான வளர்ச்சியாகஅமைந்திருந்தது.  அவர் பிறந்த மண்ணில், திகலவ தியார் திருவருள் ஆதீனத்தின்சார்பில்  தகுதியும், திறமையும், அரும்பணிகளையும் தீரத் துடன் ஆற்றி விருதுகள் வழங்கி வருவது சிறப்புக்குரியது என்றார்.

புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியின்முதல்வர்  முனைவர். சி. திருச்செல்வம் பொன்மாரி கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் எஸ். இராமதாஸ், மச்சுவாடி எஸ்.டி.கார் வாஷ், எர்த்மூவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சுந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

வீரமங்கைத் திலகம் விருதினைதிருவண்ணாமலை நகராட்சி தகனமேடை பொறுப்பாளர்  ரா. கண்ணகி,  சேவை மாமணி விருதை புதுக்கோட்டை திருங்கைகள் நலச்சங்கம், திருநங்கை ரெ.ஷிவாணிக்கும், இளம் சாதனையாளர் விருதை ஆதனக்கோட்டையை சேர்ந்த  கே. ஜெயலட்சுமிக்கும், தவிலிசை இளந்தளிர் விருதை வாராப்பூர் 5 -ஆம்வகுப்பு மாணவி  நா. நிஷாந்தினிக்கும் வழங்கப்பட்டது.வடவாளதைச் சேர்ந்த  எஸ். ஷாலினி என்றஏழைப்  பெண்ணிற்கு, இலவசமாக தையல் இயந்திரத்தையும்துணைவேந்தர் வழங்கினார்..

இந்நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற அரசு அருங்காட்சிய உதவி இயக்குநர் டாக்டர்.ஜெ. இராசமுகமது, இளங்கோ மன்ற பொருளாளர் மு. இராமுக்கண்ணு, வாசகர் பேரவை தலைவர் பேரா. ச. விசுவநாதன், நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் மேலாளர் எஸ்.மத்தியாஸ், மரம் அறக்கட்டளை தலைவர் மரம் ராஜா, அரசு மருத்துவர் டாக்டர்.எஸ். இராமதாஸ், பணி ஓய்வு பெற்ற த.நா.மி.வாரிய கணக்கு அலுவலர் மு.க.செல்வராஜ், நேரு யுவகேந்திரா கணக்கர் ஆர். நமசிவாயம், கவிஞர் கண்ணதாசன், த.மு.எ.க.சங்கத்தை சேர்ந்த சு.பீர்முகமது, ந.புண்ணியமூர்த்தி, இசைவாணர் கே.என்.ஆகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை செட்டியார் கல்லூரியின் பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் என். காயத்ரி தேவி வரவேற்றார்.ஆறு. அழகப்பன் நன்றி கூறினார்.


 

                                                   


Top