logo
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து  100 சதவீத  இலக்கை நிறைவேற்ற  வேண்டும்: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி வலியுறுத்தல்

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை நிறைவேற்ற வேண்டும்: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி வலியுறுத்தல்

10/Mar/2021 12:40:30

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரிவாக்குச்சாவடி மையத்தினை

நேரில் பார்வையிட்டபின்னர் அவர் மேலும் கூறியதாவது:


ஏப்ரல்-6 -இல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை 

ஏற்படுத்தும் வகையில் வாக்காளா;களிடையே உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்த மாதிரி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்றையதினம் இளம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டதை பார்வையிடப்பட்டது. குறிப்பாக வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்குதல், வெப்பமானி கொண்டு பரிசோதித்தல் மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட தேர்தல் நாளன்று கடைப்பிடிக்கப்படும்.

 அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக பின்பற்றி இந்த மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்று மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும் என்றார். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) சுகிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு,  நகராட்சி பொறியாளா; ஜீவாசுப்பிரமணியன், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள்  உடனிருந்தனர்.  


Top