logo
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறியதாக 22 புகார்கள்: ஆட்சியர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறியதாக 22 புகார்கள்: ஆட்சியர் சி.கதிரவன் தகவல்

09/Mar/2021 05:14:06

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக 22 புகார்கள் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி, கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள 8   சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தொகுதி  வாரியாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை (மார்ச்.9) தொடங்கியது.   இதனையடுத்து ஈரோடு ரெயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளியில்  நடைபெற்ற  பணியை பார்வையிட்ட ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி. கதிரவன் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த இயந்திரங்கள் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த  தொகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.


இந்த எந்திரங்களை அந்தந்த தொகுதி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாங்கி பாதுகாப்பான அறையில் வைப்பார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம்  கண்காணிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் போலீஸார் உள்பட  16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பதட்டமான வாக்குச்சாவடிகள் கடந்த தேர்தல் பொறுத்து முடிவு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இதுவும் மாறலாம். 

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக  திங்கள்கிழமை  22 புகார்கள் பெறப்பட்டுள்ளதுதுள்ளன.இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதை பூர்த்தியடைந்த 20 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மலைபகுதியில் உள்ள வாக்குசாவடிகளுக்கு வனத்துறை உதவியுடன் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

 கத்திரி மலையை பொருத்தவரை பொதுவாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படும். தற்போது வனத்துறை உதவியுடன் வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் முடியவில்லை என்றால் பழையபடி கழுதை கள் மூலம் கொண்டு செல்லப்படும். 4 ஆயிரத்து 757 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது என்றார் அவர்.


Top