logo
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

07/Mar/2021 10:35:43

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் மக்களவைத் தொகுதியான கன்னியாகுமரியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் சென்றனா்.

மு.க.ஸ்டாலினுடன் 30  நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு  உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

Top