logo
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் அடிக்கல்

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடிக்கல்

19/Dec/2020 06:04:34

புதுக்கோட்டை, டிச:  புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்  புதிய திட்டப்பணிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  அடிக்கல் நாட்டினார்.

 பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 18.12.2020-இல்  அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூரில் ரூ.71.57 லட்சத்தில்  மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் மற்றும் ரூ.32.55 லட்சத்தில்  வாரச்சந்தை கட்டடம் என மொத்தம் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் மதியநல்லூரில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டு அதற்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதேபோன்று அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. கால்நடை கிளை நிலையம் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருவதுடன் இதற்கு புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அன்னவாசலில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் சென்னை, திருப்பதி போன்ற பல்வேறு இடங்களுக்கு நேரடி பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் பிற கோhpக்கைகளை நிறைவேற்றற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில்,அன்னவாசல் ஒன்றியக் குழுத்தலைவர் வி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சாம்பசிவம் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.  


Top