04/Mar/2021 12:52:10
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியில் தேடுதல் தனிப் பிரிவு படையினர் மேற்கொண்ட வாகனத்தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.22 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடி சோதனை சாவடியில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் முத்துக்குமார் (BEO) தலைமையில் வாகன சோதனையில் ஈடுட்டிருந்த போது மீமிசலில் இருந்து திருச்க்குச் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த தையாராம்(26) மற்றும் மீட்டாராம் (40) ஆகியோரிடம் சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஒரு லட்சத்து 22 ஆயிரம் பணத்தை வைத்திருந்தனராம்.
இது குறித்து விசாரித்தபோது பிளாஸ்டிக் பொருள்களை வியாபாரம் செய்து சேர்த்த பணம் என்று விளக்கமளித்தனர். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தைல் இந்தத்தொகையை பறிமுதல் செய்த தனிப்பிரிவு படையினர் அதை அறந்தாங்கி உதவி ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.