logo
அரசு பள்ளி மாணவர்களுக்காக வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்கூல் பேக்குகளை பள்ளியில் இறங்கி வைத்ததால் பரபரப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்காக வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்கூல் பேக்குகளை பள்ளியில் இறங்கி வைத்ததால் பரபரப்பு

03/Mar/2021 11:25:00

ஈரோடு,  மார்ச்:  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஹரியானா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்கூல் பேக்குகளை பள்ளி வகுப்பறையில் இறங்கிவைத்தால்  பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் செயல்படும்   அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு  தமிழக அரசின் சார்பில்  வழங்கப்படும் விலையில்லா புத்தகப்பைகள் ஹரியானா மாநிலத்தில் இருந்து கண்டெ யினர் லாரி மூலம்  கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில்  மூட்டைகளாக கட்டப்பட்டிருந்த புத்தகப்பைகளை பள்ளியில் இறக்குவதற்கு லாரி நின்றிருந்ததை கவனித்த திமுகவினர் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்வரின் படத்துடன் கூடிய பைகளை இலவசமாக வழங்க எதிர்ப்புத் தெரிவித் ததால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏறபட்டது. 


அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் பள்ளி தலைமையா சிரியரிடம் மாணவர்களுக்கு இப்போது பைகளை வழங்க கூடாதென திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கண்காணிப்புக்குழுவினருக்கு பங்களாபுதூர் அரசு பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட 409 பன்டல் 13,067 ஸ்கூல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம்  அச்சிட்ட  பேக்குகள் 23.02.2021 தேதி ஹரியானா மாநிலத்தில் இருந்து கோபி கல்வி மாவட்டத்திற்கு வரவேண்டியது. 

வரும் வழியில் ஏற்பட்ட காலதமத்தினால் 03.2.2021 ஆம் தேதியான 10 நாட்கள் கழித்து கண்டய்னர் லாரி வந்துள்ளதாகவும் அதனால் முன்பு திட்டமிட்ட படி பள்ளியில் இறக்கி வைத்து பாதுகாக்கவே புத்தகப் பைகளை இறக்கி வைத்துள்ளதாகவும் இதில் எந்தவித விதி மீறல்களும் நடைபெறவில்லை என விளக்கமளித்தனர்.


இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுவினர் புத்தகப்பைபளை மீண்டும் அதே லாரியில் ஏற்றி அந்தியூர் தாலுகா அலுவலகம் கொண்டு சென்று ஒரு அறையில் இறக்கி  சீல் வைத்தனர். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இச்சம்வத்தினால் பங்களாபுதூர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Top