logo
எவ்வித சிரமங்களுமின்றி தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புதர வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி

எவ்வித சிரமங்களுமின்றி தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புதர வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி

02/Mar/2021 08:59:04

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித சிரமங்களுமின்றி 2021 சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரர் அலுவலகத்தில்  2021 சட்டப்பேரவை தேர்தல்  நடத்தை விதிமுறைகள் குறித்த  ஆலோசனைக் கூட்டத்துத்துக்கு தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:  2021 சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தபிறகு 26.02.2021 -ஆம்  தேதியிலிருந்து  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலக்கு வந்துள்ளது. அதனை தொடா;ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினருக்கு வாக்குப்பதிவு முன்னரும், வாக்குப்பதிவு பின்னரும் தேர்தல் காலகட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது..

மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான அறிமுகக் கூட்டமாகவும் இது நடைபெறுகிறது. 

 மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ;தல் கட்டுப்பாட்டு அறை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் உதவி மையம் அமைத்து அதன் மூலம் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களுக்கு தேர்தல் குறித்த அனைத்து சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 12 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் குறித்த விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் தேர்தல் குறித்த புகார்களை 24 மணிநேரமும் செயல்படும் 04322-221627 என்ற எண்ணில் தெரிவித்தால் புகார் அளித்த 24 மணிநேரத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதற்றமான வாக்கு சாவடிகளை அனைத்து தோ;தல் அதிகாரிகளும் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர்.. அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவற்றை பார்வையிட்டு பொது மக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து நம்பிக்கையூட்டும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் சிவிஜில் என்ற செயலியினை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதனை பொதுமக்கள் தங்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து புகார்களை புகைப்பட ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். அந்தப்புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேபோன்று வேட்பாளர்களுக்கென  www.suvidha.eci.gov.in  என்ற இணையதளம்  தொடங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் எவ்வித அனுமதி பெறுவதற்கும் இந்த இணையதள வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். பொதுநிகழ்ச்சிகளை பொறுத்த வரை அனுமதி பெறுவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றகொள்ளலாம்.  

வேட்பாளர்கள் எந்தவித அனுமதி பெறுவதற்கும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டும். தேர்தல் அலுவலர் கோரிக்கை பெற்ற 24 மணிநேரத்தில் காவல்துறையினரின் அனுமதி பெற்று அனுமதி கோரிய நபருக்கு  அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் எவ்வித சிரமங்களின்றி மாவட்டத்தில் தேர்தலை நடத்த  முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில்   அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை  கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு   125  வாக்குசசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. உரிமம்  பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களுக்கு முறையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அவை காவல்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் தேர்தல் விதிமுறைகள் ஏதும் மீறப்படுகின்றனவா என்பது குறித்து அலுவலா;கள் மூலம் தொடா;ந்து கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 செக்போஸ்ட் வீதம் மொத்தம் 6 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிய ஆய்வுக்கு பின் தேவையான இடங்களில் கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top