logo
தொற்று அதிகம் பரவியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கொரொனா சிகிச்சை மையம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

தொற்று அதிகம் பரவியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கொரொனா சிகிச்சை மையம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

21/May/2021 07:34:11

ஈரோடு மே: ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பி காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கொரோனா தொற்று பரவலை குறைக் கும் நோக்கில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக  வெள்ளிக்கிழமை ஆய்வு பணிகள் நடைபெற்றது. சென்னிமலையில் 1010  நெசவாளர் காலனியில் நோய் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது எனவே இப்பகுதியில் புதிதாக கொரொனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.


வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி  கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் 3000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பெருந்துறை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000 படுக்கைகளும் ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை250 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.  

இங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆக்சி ஜன் வசதி தேவைப்படாத சிகிச்சைக்கும் வீடுகளில் தனிமைப்படுத்த வாய்ப்பு இல்லாதவர் களுக்கு என 3000 படுக்கை வசதிகள் தயார் செய்யப் பட்டதில் 950 மட்டுமே நிரம்பி உள்ளது.

  இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது தடுப்பூசிக்கு ஏற்பட்டு ள்ள தட்டுப்பாடுகள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் சித்த மருத்துவமனை அமைப்ப தற்கு ஒருவர் அனுமதி கோரியுள்ளார் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் முத்துசாமி.

Top