logo
பெட்ரோல்-டீஸல், கேஸ் விலை உயர்வைக்கண்டித்து புதுக்கோட்டையில் திமுவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீஸல், கேஸ் விலை உயர்வைக்கண்டித்து புதுக்கோட்டையில் திமுவினர் ஆர்ப்பாட்டம்

22/Feb/2021 08:13:14

புதுக்கோட்டை, பிப்: பெட்ரோல்-டீஸல், சமையல் கேஸ் விலை  உயர்வைக்கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் ரா.சு.கவிதைப்பித்தம், த. சந்திரசேகரன், க. நைனாமுகமது, அரு, வீரமணி, டாக்டர் முத்துராஜா, எம்.எம். பாலு, ராம. செல்வராஜ், புதுகை விஜயா, கே.எஸ். சந்திரன், சுப. சரவணன், அப்புக்காளை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top