logo
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் 73 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் 73 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் விஜயபாஸ்கர்

25/Feb/2021 12:32:40

புதுக்கோட்டை, பிப்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மற்றும் நகர  அதிமுக கழகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  73- கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி  ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதில், வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்எல்ஏ- வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான், நகரச்செயலர் க. பாஸ்கர், நிர்வாகிகள் வீ.ராமசாமி, எஸ்ஏஎஸ். சேட், என். மாசிலாமணி, எஸ். ராமநாதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு  நிர்வாகிகள் கேக் வழங்கினர்.

Top