logo
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மநீம தலைமையில் 3 -ஆவது அணி அமையும்:கமல்ஹாசன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மநீம தலைமையில் 3 -ஆவது அணி அமையும்:கமல்ஹாசன்

22/Feb/2021 11:41:26


மக்கள் நீதி மய்யத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள  சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

அக்கூட்டத்தில்  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது: என் மொழி மற்றும் அடையாளத்தை அழிக்கநினைப்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது. தலைவர் (ரஜினி) அழைக்கப்படும் நபர் தொடர்ந்து அரசியலை கவனித்து வருகிறார். அதனால் வாய்ப்பு என்ன இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று அழைக்கவில்லை. வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றே அழைக்கிறேன்.

முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது விரும்பிய நேரத்தில் அவரைப் பார்க்க முடிந்தது தற்போது ஆள்பவர்களைப் பார்க்க முடிவதில்லை. கோபத்தால் அரசியலுக்கு வந்தவன் என்று கூறுவது தவறு. மக்கள் அன்பு மற்றும் அழுகையாலே அரசியலுக்கு வந்தேன். பிரதமர் மோடிக்கு 7 முறை கடிதம் எழுதினேன். ஆனால் ஒரு முறை கூட அவரைச் சந்திக்க முடியவில்லை மிழனுக்கு மரியாதை கிடைப்பது இல்லை என்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:ரஜினியைச் சந்தித்தபோது, இரண்டு நண்பர்கள் என்ன பேசுவார்களோ அதைத்தான் பேசினேன். அரசியல் பேசவில்லை. இருவரும் மாறிமாறி நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் இருந்தோம். காலில் நானும் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். இருவரும் பார்த்து நீண்ட நாள்களாகிவிட்டன. அதன் அடிப்படையில் சந்தித்த பேசினோம். அவ்வளவுதான் பேச்சுத்தான் நடந்தது

ரஜினிதான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். உடல்நிலை சரியில்லை என்று கூறி பிறகு அவரை எப்படி அரசியலுக்கு அழைக்க முடியும். அது நல்ல நண்பனுக்கு அடையாளமாக இருக்க முடியாது. ஆனால் ரஜினி இன்னும் அரசியலைக் கவனித்து கொண்டிருக்கிறார்.

கவனிக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் ஆகும். அவரும் கவனிக்க வேண்டும். கவனிக்காமல் விட்டதாதல்தான் இந்த அவலத்துக் ஆளாகிக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்கு வராமல் இருந்த 40 ஆண்டுகளாகக் கூட நான் அரசியலைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.

மநீம தலைமையில் 3 -ஆவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத்தான் தோன்றுகிறது. மேகங்கள் கூடி வருவது தெரிகிறது. விரைவில்மழை பெய்யும்.  கூட்டணியில் சேர்வதற்கு என்னிடம் நேரடியாக யாரும் அழைப்பு விடுக்கவில்லை தூதுவிடுவது எல்லாம் அழைப்பு இல்லை. தலைமையிடம் இருந்து வரும் அழைப்பைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மநீம வில் நல்லவர்கள் இணைய வேண்டு என்றார் கமல்ஹாசன்.

Top