logo
கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்.

கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்.

20/Feb/2021 08:51:30

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கீரமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கத்தின் மாவட்டச்செயலர் முகமது மீரான் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் சித்ரா கலந்துகொண்டார். முகாமில் பெறப்பட்ட 25 யூனிட் ரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதில், கிளை நிர்வாகிகள் ஹசன் அலி, உசேன் அலி, சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top