logo
அம்மா மினி கிளினிக்  கிராம மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அரண்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அம்மா மினி கிளினிக் கிராம மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அரண்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

19/Feb/2021 09:11:33

 


புதுக்கோட்டை, பிப்: முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் கிராமமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கின்றன என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூரில் வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலையில் நடந்த நிகழ்வில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து,  கர்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழக மக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கிராமப்புற மக்களுக்கு உயா;தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில்  அம்மா மினி கிளினிக்குகள்  தொடங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டு வருகிறது. நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ள  அம்மா மினி  கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும். 

இந்த மினி கிளினிக்கில் சா;க்கரை அளவு, ஹச்பி அளவு, சளி பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகளும், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை, கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவர். 

இதேபோன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒலியமங்கலம், ஆலவயல், வார்பட்டு, திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை, லெம்பலக்குடி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மேல்நிலைப்பட்டி, கல்லூர் ஆகிய கிராமங்களிலும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் இருப்பிடங்களிலேயே உயர்தர மருத்துவ சேவையை  அம்மா மினி கிளினிக்குகள் வழங்குகின்றன. எனவே இப்பகுதி பொதுமக்கள் அம்மா மினி கிளினிக்கை உரிய முறையில் பயன்படுத்தி நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும்.

மேலும் தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கவும், திருமணத்தின் போது ஏழை பெற்றோரின் சிரமத்தைப் போக்கும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். இதேபோன்று முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா பட்டா, சாலைவசதி, பேருந்துவசதி, குடிநீர்வசதி, புதிய கட்டடங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டு கால  கோரிக்கையை நிரைவேற்றும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்  தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடிகே. பழனிசாமி வரும் 21-ஆம் தேதி  அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றார்  அமைச்சர் விஜயபாஸ்கர்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் பழனியாண்டி, பொது சுகாதார துணை இயக்குநர் பா. கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Top