logo
கோயில் பூசாரிகளுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்க வேண்டும்: தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

கோயில் பூசாரிகளுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்க வேண்டும்: தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

18/Feb/2021 10:31:31

சேலம், பிப்:   தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பாக, சேலம் கிழக்கு மாவட்ட ஆத்தூர் உடையார்பாளையம் பாக்யதிருமண மண்டபத்தில் புதன்கிழமை(17.2.2021) மாநிலத்தலைவர் பி. வாசு தலைமையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில்  நிரைவேற்றப்பட்ட   பிற  தீர்மானங்கள்: 

மத்திய அரசுக்கு தமிழக பூசாரிகள் கோரிக்கை :

இந்து சமுதாயத்தின் அடித்தளமாக விலங்கும் கிராமபுற திருக்கோயில்களில் பணியாற்றி வரும் தன்னலமற்ற பூசாரிகள் வருவாய் ஆதாரம் இன்றி இருந்து வருகின்றன. அவர்களுக்கு நிரந்தர வருவாயோ, ஊதியமோ, ஏதும் இல்லை. இந்து சமய பாதுகாப்பு தெய்வ திருக்கோவில் பணி என்ற குறிக்கோளுடன் அவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது எனவே கிராமபுற பூசாரிகளுக்கு மாத ஊதியம், வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் வீடு இல்லாமல் அல்லல்படும் பூசாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்ட நிதி உதவி போன்ற நலத்திட்டங்களை மத்திய அரசுஅறிவிக்க வேண்டும். 

இத்திட்டங்களை தமிழக அரசு மூலம் செயல்படுத்த மத்திய அரசு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் இது தொடர்பாக மத்திய கலசாராத்துறை அமைச்சகத்திற்கு சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோவில் பூசாரிகள் சங்கம் கடந்த ஆண்டு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. இந்து சமயத்தின் சனாதன தர்மத்திருக் கோவில்களின் பாதுகாவலனாக இருப்பதாக நம்பப்படும் மத்திய அரசு கிராமபுற பூசாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். 

தமிழக அரசுக்கு நன்றி :

எங்களது நீண்டகால கோரிக்கையான பூசாரி ஓய்வூதியம் 3,000 ஆயிரமாக வரும் வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

 பூசாரிகளுக்கு மாத ஊதியம்:

இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 40,000 திருக்கோயில்கள் உள்ள இதில் பெரிய திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மட்டும் பணி நிரந்தரம், மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது இதில் 14,000-த்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் இல்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதி மன்றம் உத்தரவிட்டும் பூசாரிகளுக்கு அர்ச்சகர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதற்குரிய நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும்.

பூசாரிகளுக்கு வீட்டு மனை :

குடியிருக்க வீட்டுமனை இல்லாமல் பல்லாயிரக்கணக்கான பூசாரிகள் உள்ளனர்  இவர்களுக்கு அரசு நிலத்திலோ அல்லது .  திருக்கோவில் நிலத்திலோ அவரவர்கள் வசிக்கும் பகுதியில் குடியிருக்க 3 சென்ட் நிலம் ஒதுக்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்: 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  திருக்கோயில்களில் மின் கட்டணம் செலுத்தக் கூட வசதி இல்லாமல் உள்ளனர். இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் அல்லது அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சலுகைக் கட்டணத்தில் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். 

பூசாரிகளுக்கு பயிற்சி முகாம்:

உரிய பயிற்சி இல்லாததால் பூசாரிகளை கோயிலில் இருந்து வெளியேற்ற சதி நடக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள, மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத பெரும்பாலான திருக்கோயில்களில் பூசாரிகளே பூஜை செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் திருக்கோயில் நிதியிலிருந்து பூசாரிகளை புறக்கணித்து விட்டு அர்ச்சகர், பட்டாச்சாரியார், குருக்கள் போன்றோருக்கு மட்டும் பயிற்சி வழங்கி வந்தது.

 பூசாரிகளுக்கும் இதுபோன்ற பயிற்சியில் வாய்ப்பு வழங்க வேண்டுமென, நீதி வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதி அரசர் நீதிப்பேராணை மனு எண்.3677/2019-இல் மாண்பமை நீதி மன்ற 07.02.2019 நாளிட்ட ஆணையில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆணையர் இது வரை செயல்படுத்தவில்லை இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள திருக்கோயிலில் பூசாரியாக பணியாற்றிட வேண்டுமென்றால், ஆகமவேத பாடசாலையில் படித்த சான்றிதழ் இணைக்கவேண்டுமென அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற பாடசாலைகள் பூசாரிகளுக்கென்று அரசு சார்பில் நடத்தப்படவில்லை குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் உள்ளன. 

இது போன்ற பாடசாலைகளில் பூசாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற அவலநிலை தொடரும் பட்சத்தில் பூசாரிகள் பூஜை செய்து வரும் திருக்கோயில்கள், பாடசாலையில் படித்தவர்கள் கைக்குச் செல்லும் நிலை ஏற்படும். மாவட்டம் தோறும் பூசாரிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெரிய கோயிலில் இருந்து வரும் உபரி நிதியிலிருந்து கிராமபுற திருப்பணி: 

நிதி ரூ.100,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள் சுமார் 15,000 ரூபாய்க்கு மேல் GST வரி பிடித்தம் செய்கின்றன, இந்த கிராமப்புற திருப்பணிக்கு GST வரி பிடித்தம் செய்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பூசாரி மறைவுக்கு பின்பு குடும்ப ஓய்வூதியம்:

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு பூசாரிகள் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது அதேபோல திருக்கோயில் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது ஓய்வூதியம் பெற்று வரும் திருக்கோயில் பணியாளர் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 50% ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது இதில் பாகுபாடின்றி ஓய்வூதியம் பெற்று வரும் பூசாரிகள் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பூசாரி ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் பல லட்சம் பூசாரிகள் பூஜை செய்து வருகின்றனர். இதில் 60 வயதிற்கும் மேற்பட்டுள் பூசாரிகள் 30,000 -த்திற்கும் மேல் உள்ளனர் ஆனால் 4,000 பூசாரிகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு பூசாரி மறைந்தால் தான் மற்றொரு பூசாரி ஓய்வூதியம் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கையை 20,000 ஆயிரமாக உயர்த்த வேண்டும் தற்பொழுது ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் வயது வரம்பை 60 என்பதை குறைத்து 58 ஆக மாற்றம் செய்ய வேண்டும்.

பூசாரிகள் நலவாரியத்தின்  தலைவராக ஒரு பூசாரியை நியமனம் செய்ய வேண்டும்: 

 பூசாரிகள் நலவாரியம் பல ஆண்டுகளாக செயல்படவில்லை, இந்த நலவாரியத்திற்கு அரசு நிதியும், திருக்கோயில் உபரிநிதியும் வழங்கி நலவாரியத்தை செயல்படுத்தும் வகையில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பதோடு இவ்வாரியத்தின் தலைவராக பூசாரி ஒருவரை தமிழக அரசு நியமிப்பதோடு பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக சேர வருமான சான்று இணைக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கவேண்டும்.

தற்பொழுது அந்த சூழல் இல்லாததால் பூசாரிகள் நல வாரிய விண்ணப்பத்தை வருமானச் சான்று இணைக்க வேண்டுமென விண்ணப்பத்தை நிராகரிப்பது வருத்தமளிக்கிது. நலத்திட்டம் பெறும் போது வருமான சான்று பெற்று நலத்திட்டங்களை வழங்க வேண்டும் மற்றும்   கோயில் நிலங்களில் நீர் வசதி செய்ய பம்பு செட்டுடன் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும், பூசாரி களுக்கு விருது வழங்குதல், அனைத்து கிராம கோயில்களிலும் ஒரு கால பூஜை பொருள்கள் வாங்க நாள் ஒன்றுக்கு ரூ.150 வழங்குதல்,

கிராமக் கோயில்களுக்கு பொங்கல் வைக்க இலவச கேஸ் அடுப்பு வழங்குதல், சிறுதொழில் தொடங்க பூசாரிகளுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குதல், என்பன உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநிலச்செயலர் எஸ். சங்கர், பொருளாளர் கே. சுந்தரம்,  சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் கே. ராயதுரை, செயலர் பி. கணேசன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து  கொண்டனர்.

Top