12/Jan/2021 09:44:49
புதுக்கோட்டை பிருந்தாவனம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை ஆராதனை நடந்தது.
மாலையில் வெள்ளிக்கவசம் மலர் அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர் மழையிலும் பக்தர்கள் வருகை தந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தேங்காய் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது.ஏற்பாடுகளை சிறப்புடன் கோவில் நிர்வாகிகள் செய்தனர்