01/Dec/2020 11:11:06
ஈரோடு: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களையும் அழிக்க கூடிய பிஜேபி அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாககூறியும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டசெயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு சங்க நிர்வாகிகளான ரவீந்திரன், அய்யாவு, கோபிநாத், பிரகாசன், முத்துசாமி ,கெம்புராஜ், மாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்..