logo
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.15 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு.

05/Jan/2021 11:35:08

புதுக்கோட்டை-ஜன: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைஅமைச்சர் சி. விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார்  

அதையடுத்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக மக்களின்  முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் தேவையறிந்து வளச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

 அதனடிப்படையில்  ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருகோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரூ.39.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண், பெண் குளியல் அறைகள், உடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகள்  பக்தர்கள் பயன்பாட்டுக்கென  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இக்கோயிலில் ரூ.15.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  மேலும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆவுடையார்கோயில் புதிய பேருந்து நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 இதேபோன்று கோட்டைப்பட்டிணத்தில் புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பயணியற் நிழற்குடை கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள்  மிகுந்த பயன் பெறுவாகள்.   இதேபோன்று பொதுமக்களின் கோரிக்கைகள் தொடா;ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி,  அறந்தாங்கி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், பொது சுகாதார துணை இயக்குநர்  விஜயகுமார், 108 அவசர சிகிச்சை ஊர்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Top