logo
ஈரோடு கிழக்கு  தொகுதியில் நடந்த  சிறப்பு மனுநீதி திட்ட முகாம்:எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த சிறப்பு மனுநீதி திட்ட முகாம்:எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

04/Dec/2020 06:58:08

ஈரோடு: ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள்- கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு. தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பபட்ட கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் ஆட்சியர் சி. கதிரவன்  தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து,  முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு , மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் , பெண்களுக்கு தையல் எந்திரம்  போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் இருவரும் வழங்கினர்.

விழாவில், எம்எல்ஏ- கே .எஸ். தென்னரசு  பேசுகையில்,  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றதன் காரணமாக தமிழகம் முழுவதும் 330- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.  ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டுமென  நானும். கே.வி. ராமலிங்கம் எம்.எல்.ஏ.வும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ரூ 81 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது மாவட்டத்திற்கு புதிதாக 5  மருத்துவர்கள் கிடைப்பார்கள். மேலும் மக்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வரும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றார்.

இதில், பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி,   முருக சேகர், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாவைஅருணாசலம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரத்தன் பிரித்வி, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top