logo
சட்டப்பேரவை தேர்தலில் எளிமையான முறையில் போட்டி: புதிய பார்வை கூட்டணி வேட்பாளர்  உறுதி

சட்டப்பேரவை தேர்தலில் எளிமையான முறையில் போட்டி: புதிய பார்வை கூட்டணி வேட்பாளர் உறுதி

16/Feb/2021 04:47:35

புதுக்கோட்டை, பிப்: சாமானிய மக்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எளிமையான முறையில் போட்டியிடவுள்ளதாக  புதிய பார்வை கூட்டணி என்ற அமைப்பின் முதல்வர் வேட்பாளர் சக்திவேல்  தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் தமிழக முற்போக்கு கட்சி,தேசிய மக்கள் கட்சி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய பார்வை கூட்டணி என்ற அமைப்பின் சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டம் (பிப்.16)  நடைபெற்றது.

 இதன் பின்னர்  செய்தியாளர்களுக்கு புதிய பார்வை கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் சக்திவேல்   அளித்த பேட்டி: 

கூறுகையில்: தமிழகத்தில் சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து புதிய பார்வை கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும்,தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எளிய முறையில் மக்களை சந்தித்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்து வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் மக்களுக்கான எளிய ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கம். 

 மக்கள் பணபலம் மிக்க கட்சிகளின் வேட்பாளர்களை இந்த தேர்தலில் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் தங்களை போன்ற எளிய வேட்பாளர்களை தான் வரும் தேர்தலில் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பயணங்களில் தங்கள் அமைப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.


மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும்,அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பாஸ்ட்ராக் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Top