11/Feb/2021 12:17:33
புதுக்கோட்டை, பிப்: தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி, வேதநாயகி அம்மாபாளுக்கும் பாலபிஷேகம் பன்னீர், தயிர், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும் மலர் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. இதையொட்டி சாந்தநாத சுவாமி மலர் அலங்காரத்திலும் , வேதநாயகி அம்பாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.