logo
கழிவு நீர்கால்வாயில்  சிவப்பு நிறத்தில் தண்ணீர்:பொதுமக்கள் அளித்த புகாரில்  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு.

கழிவு நீர்கால்வாயில் சிவப்பு நிறத்தில் தண்ணீர்:பொதுமக்கள் அளித்த புகாரில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு.

12/Feb/2021 08:23:00

ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம் ,அக்ரஹாரம்,பெரியசேமூர், சூளை  மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள்,தோல் பதனிடும் ஆலைகள்  செயல்பட்டு வருகிறது. 

இதுபோன்ற ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுகளால் நீர்நிலைகள் பெரிதும் பாதுக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில்  செல்லும் கழிவு நீர்  ரத்த சிவப்பு நிறத்தில் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்னர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் சிவப்பாக செல்லும் கழிவு நீர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்டமாக தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள பாலத்தின்கீழ் கொட்டப்பட்டுள்ள சாய கழிவு மூட்டைகள் மூலம் நீரின் நிறம் மாற்றம் நடந்திருப்பது  தெரியவந்துள்ளது. அந்த கழிவுகளை கொட்டியது எந்த ஆலை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் சாய கழிவு நீரை கால்வாயில் கலந்த காரணத்தால் அண்மையில் 30 சாய ஆலைகள் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Top