logo
கொள்முதல் நிலையங்கள் மூலம் 7,414 விவசாயிகளின்  வங்கி கணக்கில்   ரூ.98.84 கோடி  வரவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

கொள்முதல் நிலையங்கள் மூலம் 7,414 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.98.84 கோடி வரவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

13/Feb/2021 04:16:21

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாh;கோவில் ஊராட்சி ஒன்றியம், லெக்கணாப்பட்டி ஊராட்சி, பாதிப்பட்டி கிராமத்தில்  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து  வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  மேலும் தெரிவித்ததாவது: 

 தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் சிரமங்களை  உணர்ந்து  அவர்களது கோபிக்கையினை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பயனாக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் பாதுகாவலனாக  முதலமைச்சர்  திகழ்கிறார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடா;ந்து திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி  பாதிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் இதுவரை 80 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இதன் பயனாக விவசாயிகள் இடைதரகர்கள் தலையீடின்றி  விளைவித்த நெல்லினை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்த்து அதற்கு தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடப்பு பருவத்தில் 1.10.2020 முதல் 11.2.2021 வரை விவசாயிகளிடமிருந்து 56,844 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 7,414 விவசாயிகளுக்கு ரூ.98.84 கோடி  தொகை  வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதே போன்று விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயா;வதுடன் புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும். மேலும் இப்பகுதி பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

 இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 

Top