logo
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

13/Feb/2021 01:33:09

ஈரோடு, பிப்: பிப்ரவரி 14-ஆம் தேதியை காதலர் தினமாக உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 இந்தியாவில் காதலர் தினத்திற்கு இந்து முன்னணி அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ள காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது  இந்த ஆண்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நான்கு வழிச்சாலை சந்திப்பில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நாய்க்கும் வெள்ளாட்டிற்கும் திருமணம் நடத்தி வைத்து நூதனமுறையில் காதல் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

முன்னதாக வெள்ளாட்டிற்கும் நாயையும் மாலை அணிவித்து கவுந்தப்பாடியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து கவுந்தப்பாடி நால்ரோட்டில் நாய்க்கும் வெள்ளாட்டிற்கும் மாலைகளை மாற்றி அணிவித்து திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். 

 அதன் பின்னர் நாயையும் ஆட்டையும் அவிழ்த்து விட்டு விரட்டினர். இதனால் காதலர்கள் செய்யும் திருமணமும் இவ்வாறு தான் பாதியில் ஓடிவிடும் என்று வலியுறுத்தினர். இச்சம்பத்தினை கவுந்தப்பாடி பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சிரிப்பையும்  வெளிப்படுத்திச்சென்றனர்…

Top