logo
அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

24/Jun/2021 03:01:44

கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர் வெளியிட்ட தகவல்:

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களில் சமூகநலத்துறை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் எவரேனும்  இருப்பின் உடனடியாக கரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தை  தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்று பயன் அடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Top