12/Feb/2021 09:10:50
ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் -பவானி சாலையில் கஞ்சிதொட்டிதோட்டம் என்ற பகுதியில் ராசம்மாள்(75) என்ற மூதாட்டி தனது மகன் ராஜவேலுவுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது தோட்டத்தில் உள்ள கிணற்றுப் பகுதி வழியாக தோட்டத்திற்கு சென்ற ராசம்மாள் எதிர்பாராத விதமாக தடுமாறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தாராம்.
இதனை அறிந்த அவரது மகன் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி ராசம்மாளின் சடலத்தை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.