logo
கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை  செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனா நோய்க்கு பலி: சென்னை பத்திரிகையாளர் மன்றம்  இரங்கல்

கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனா நோய்க்கு பலி: சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

15/May/2021 07:44:04

சென்னை, மே: புதிய தலைமுறை கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனாவுக்கு பலியானதற்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம்  இரங்கல்  தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாவட்டம் ,கோபிச்செட்டிபாளையம், வெள்ளாங்கோவில் பகுதியைச் சார்ந்த திரு.சந்திரசேகரன் ( 47)புதிய தலைமுறையில்  செய்தியாளராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். செய்திகளை வழங்குவதில் துடிப்புடன் செயல்பட்ட முன்களப் பணியாளர் - செய்தியாளர்  வி..சந்திரசேகரன் கொரொனா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.சிகிச்சை பலனளிக்காமல் செய்தியாளர் சந்திரசேகரன்(15-05-2021) சனிக்கிழமை உயிரிழந்தார்.

 கொரோனா விழிப்புணர்வுப் பணியில் முன்களப் பணியாளராக செயல்பட்ட செய்தியாளர் 47 வயது சந்திரசேகரனின் மரணம் பெரும் அதிர்ச்சியை வேதனையைத் தருகிறது.அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.அவரது வயது முதிர்ந்த பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் , நண்பர்கள் மற்றும் ஊடவியாளார்கள் என அனைவருடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.


செய்தியாளர் சந்திரசேகரன் குடும்பத்தினருக்கு முன்களப் பணியாளருக்கான நிவாரண நிதியை வழங்கிட தமிழக முதல்வருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.மேலும் பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவும் வேண்டுகிறோம் . பத்திரிகையாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த செய்தித்துறைக்கு உத்தரவிடவும் வேண்டுகிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Top