logo
கோபி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ரொக்கம்  6 பவுன் நகை எரிந்து சேதம்

கோபி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ரொக்கம் 6 பவுன் நகை எரிந்து சேதம்

12/Feb/2021 07:30:21

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருதாம்பாடி புதூரில் மரம் ஏறும் தொழிலாளிகளான தனசேகர் மற்றம் பழனிச்சாமி ஆகிய இருவர்களின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில்  வீட்டு உபயோகப்பொருட்கள் சொத்து ஆவணங்கள் துணிகள் அடையாள அட்டை ஆவணங்கள் உட்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் பழனிச்சாமியின் வீட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் 6 சவரன் கோயில் தங்க நகைகளும் எரிந்து சாம்பலானது.

 கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னாரிபாளையம் ஊராட்சி கருதாம்பாடிபுதூரில் மரம் ஏறும் தொழில் செய்துவரும் தனசேகர் மற்றம் பழனிச்சாமி ஆகியோர் தங்களகு சொந்தமான இடத்தில் குடிசை வீடு அமைந்து அதில் குடியிருந்து வருகின்றனர். அருகில் சிறிய குடிசை அமைத்து அதில் மரம் ஏறும் தொழில் சேகரிக்கப்படும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் சிறிய ஆலையை அமைந்து அதில் தொழில் செய்துவருகின்றனர்.

 இந்நிலையில்,  தனசேகர் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் மரம் ஏறி கொண்டுவந்த பதநீர் காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை  ஈடுபட்டிருந்த அவர்களது மனைவிகள் பணியில் ஈடுபட்டிருந்தபோது  அருகில் இருந்த அவர்களது குடிசை வீடுகள் தீடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர் பழனிச்சாமி மற்றும் அவர்களது மனைவிகள் சப்தம் போட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடியாமல் போகவே நம்பியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவநது அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்ததுடன் தீயையும் அணைத்தனர். 

இந்த தீவிபத்தில் தனசேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்களின் இரு கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. விபத்தில்  வீட்டு உபயோகப்பொருட்கள் சொத்து ஆவணங்கள் துணிகள் குடும்ப அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடையாள ஆவணங்கள் உட்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் பழனிச்சாமியின் வீட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் 6 சவரன் கோயில் தங்க நகைகளும் எரிந்து சாம்பலானது.   சிறுவலூர் போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில பதநீர் காய்ச்சும் அடுப்பிலிருந்து பறந்து சென்ற தீப்பொறியால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Top