04/Aug/2021 02:23:53
ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்ட தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான ராணா லட்சுமணனின் 21-ஆ்ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஈரோட்டில் உள்ள ராணா லட்சுமணனின் உருவச்சிலைக்கு, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ராணா லட்சுமணனி் மகள் சக்தி, மகன் குமரவேல், நிர்வாகிகள் கிருபா, முருகானந்தபதி, உதயசங்கர், மோகன், வஜ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.