logo
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.66.50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.66.50 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

23/Nov/2020 01:21:40

ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பாறை, கொங்கனாம் பள்ளி, நேதாஜி நகர், மோகன் குமாரமங்கலம் வீதி, காந்திஜி ரோடு, நேதாஜி வீதி பகுதியில் இரண்டு இடம் என மொத்தம் 7  இடங்களில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.9.50 லட்சம் விதம் ரூ.66.50 லட்சம் மதிப்பில்  புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

புதிய அங்கன்வாடி மையங்களில் திங்கள்கிழமை  நடந்த திறப்பு விழாக்களில்  கே. வி .ராமலிங்கம் எம்.எல்.ஏ, கே.எஸ் தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

இதில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, அ.தி.மு.க பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், சூரம்பட்டி தங்கவேலு உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top