logo
அரசு விழா அறிவிப்பு: தமிழக முதல்வருக்கு வாரியார் குடும்பத்தினர் நன்றி

அரசு விழா அறிவிப்பு: தமிழக முதல்வருக்கு வாரியார் குடும்பத்தினர் நன்றி

10/Feb/2021 09:43:22

வேலூர்: கிருபானந்த வாரியார் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு  கிருபானந்த வாரியார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

காட்பாடி, காங்கேயநல்லூரில் பிறந்து சைவ சமய சொற்பொழிவாற்றி அதன் மூலம் கிடைத்த வருவாயில் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட சமூக சேவைகள் புரிந்தவர் திருமுருக கிருபானந்தவாரியார்.

அவர் நினைவாக கிருபானந்த வாரியார் பிறந்த ஆகஸ்ட் 25 -ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று வேலூரில் செவ்வாய்க் கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு வாரியார் குடும்பத்தினர் முதல்வரை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Top