logo
இலுப்பூரில் கட்டப்படும் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்:  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு

இலுப்பூரில் கட்டப்படும் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு

18/Dec/2020 04:26:35

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சி, இடையப்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியினை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இதையடுத்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  கூறியதாவது: மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் வீடற்ற பொதுமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வரும் ஏழை பொது மக்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள் மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட எண்ணை கிராமத்தில் ரூ.8.18 கோடி மதிப்பீட்டில் 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடமும், இடையப்பட்டியில் ரூ.7.77 கோடி மதிப்பீட்டில் 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. இதில் இடையப்பட்டியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமான பணிகள் இன்றைய தினம் நோpல் பாh;வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் படுக்கையறை, சாப்பிடும்அறை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதே போன்று குடிநீர்வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பிற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

கட்டுமான பணிகளை தரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவில் கட்டிமுடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

. இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவா; வி.ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சாம்பசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Top