logo

சசிகலா வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஈரோடு போலீசார் 320 பேர் விரைவு

07/Feb/2021 11:16:47

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சிறையில், சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மாதம் 27-ஆம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பெங்களூரில் சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சசிகலா இன்று(8ம் தேதி) சென்னைக்கு வர உள்ளார். அவருக்கு கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அ.ம.மு.க-வினர் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். சசிகலா வருகையினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கிருஷ்ணகிரியில் அதிகளவில் அ.ம.மு.க., தொண்டர்கள் கூட வாய்ப்பு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக  ஈரோடு மாவட்டத்தில் இருந்து 320போலீசார், ஈரோடு எஸ்பி தங்கதுரை தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் வாகனங்களில் தனித்தனி குழுக்களாக புறப்பட்டு சென்றனர். அவர்கள், கிருஷ்ணகிரியில் பாதுகாப்பு பணியினை முடித்து விட்டு திங்கள்கிழமை பிற்பகலில்  ஈரோடு திரும்புவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Top