logo
ஈரோட்டில் இளம்பெண்  கொலை செய்த  வழக்கில் பெயிண்டர் கைது

ஈரோட்டில் இளம்பெண் கொலை செய்த வழக்கில் பெயிண்டர் கைது

26/Jan/2021 09:28:29

ஈரோட்டில் கடன் கொடுக்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பெ.ிண்டரை போலீஸார் கைது  செய்தனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேகா(30). இவர்களுக்கு அஸ்வந்த் (3), விஸ்வா(2) இரு குழந்தைகள் உள்ளனர். ரேகா கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ரேகா வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ரேகாவை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடினார். இதை கண்ட அப்பகுதி மக்கள் ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் ஈரோடு எஸ்.பி.தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையாளி, ஈரோடு அடுத்துள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்த செந்தில்குமார்(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், செந்தில்குமாரும், ரேகாவும் திருமணத்திற்கு முன்பு ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். செந்தில்குமாருக்கு திருணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், ஜவுளிக்கடையில் இருந்து நின்ற பிறகு பெயிண்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில் செந்தில்குமாருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. ரேகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ள தகவல் அறிந்து நேற்று முன்தினம் காலை ரேகாவை சந்திக்க வீட்டிற்கு  சென்றுள்ளார். அப்போது தனக்கு கடன் தொல்லை இருப்பதாகவும், இதை சரி செய்ய பணம் கொடுத்து உதவும்படி செந்தில்குமார் கேட்டுள்ளார்.

ஆனால் ரேகா தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து நகைகளை கழற்றி கொடுக்கும்படி கேட்டுள்ளார். நகைகள் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தறுத்து ரேகாவை கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் ரேகாவின் குழந்தையிடம் இருந்த சிறிய மோதிரம் உள்பட மொத்தம் 6 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். 

கொலை செய்யும் போது ரேகா போராடியதில் கொலையாளி செந்தில்குமாருக்கும் கையில் கத்தி காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரேகாவிடமிருந்து எடுத்து சென்ற நகையில் ஒரு பகுதியை செந்தில்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கியதையடுத்து அடமான நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Top