logo
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203  வாக்காளர்கள்:  58,620 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள்: 58,620 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

20/Jan/2021 11:27:29

 ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில்  வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203  வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58 ஆயிரத்து 620  பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியில் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட டிஆர்ஓ கவிதா பெற்றுக்கொண்டார். 

இதுகுறித்து ஆட்சியர் சி. கதிரவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6 (சேர்த்தல்), படிவம் 7 (நீக்கல்), படிவம் 8 (திருத்தம்) மற்றும் 8ஏ (இடமாற்றம்) படிவங்களை  விசாரணை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், மொத்த வாக்காளர்கள் 19 லட்சத்து 16 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில் படிவம்  6-இன்படி 58 ஆயிரத்து 620 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கபப்ட்டுள்ளனர். படிவம் 7-இன்படி 17 ஆயிரத்து 948 வாக்காளர்கள்  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களாக 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 பேர் உள்ளனர்.  

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள்:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 987 பெண் வாக்காளர்கள், 15 திருநங்கைகள், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 373 பெண் வாக்காளர்கள், 30 திருநங்கைகள் உள்ளனர்.

மொடக்குறிச்சி-பெருந்துறை

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 952 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்கள், 12 திருநங்கைகள், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 325 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 67 பெண் வாக்காளர்கள், 6 திருநங்கைகள் உள்ளனர்.

பவானி-அந்தியூர்

பவானி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 231 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 291 பெண் வாக்காளர்கள், 9 திருநங்கைகள், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 712 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 215 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் உள்ளனர்.

கோபி-பவானிசாகர்

கோபி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 551 பெண் வாக்காளர்கள், 6 திருநங்கைகள், பவானிசாகர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 755 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள், 8 திருநங்கைகள் உள்ளனர்.  

மொத்தமாக, 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 3 ஆயிரத்து 332 பெண் வாக்காளர்கள், 104 திருநங்கைகள் என 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

புதிய வாக்காளர்களாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 836 பேர்,  ஈரோடு மேற்கு தொகுதியில் 10 ஆயிரத்து 192, மொடக்குறிச்சி தொகுதியில் 6 ஆயிரத்து 187, பெருந்துறை தொகுதியில் 7 ஆயிரத்து 101, பவானி தொகுதியில் 7 ஆயிரத்து 642, அந்தியூர் தொகுதியில் 6 ஆயிரத்து 824, கோபி தொகுதியில் 7 ஆயிரத்து 991, பவானிசாகர் (தனி) தொகுதியில் 6,847  என 8 தொகுதிகளிலும் 58 ஆயிரத்து 620 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

 வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்டிஓ அலுவலகங்கள், தாசில்தார்  அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொது மக்கள் பார்வையிடலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மா.இளங்கோவன், நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஈரோடு ஆர்டிஓ சைபுதீன், தாசில்தார் (தேர்தல்) சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top