29/Jan/2021 07:08:27
புதுக்கோட்டை, ஜன: இந்துசமய அறநிலையத்துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை அருள்மிகு பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பொற்பனை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ருத்ராட்ச மாலை அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலையில் முனீஸ்வரர் சுவாமிக்கு ஹோமம் மஹா பூர்ணாஹுதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முனீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பூஜை பொருள்களுடன் 27 நட்சத்திரங்களுக்கான புண்ணிய தீர்த்த அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ருத்ரசமாலை மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பெங்களூர் சுவாமிநாதன் மருத்துவர் கோபிநாத், சிவம்சண்முகநாதன், கருணாநிதி சுரேஷ், ரவி,மாரி, ராஜு, கோவிந்தராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை ,ஆலங்குடி,திருவரங்குளம் மற்றும் சுற்றுப் வட்டாரத்திலிருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.