logo
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில்  வாக்குகளை பணத்துக்கு விற்க வேண்டாம்: சமக நிறுவனர் நடிகர் சரத்குமார்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளை பணத்துக்கு விற்க வேண்டாம்: சமக நிறுவனர் நடிகர் சரத்குமார்

02/Feb/2021 07:27:42

ஈரோடு, பிப்: வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  வாக்காளர்கள் வாங்குகளை  பணத்துக்கு விற்க வேண்டாம் என்றார் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் நடிகர்  சரத்குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு வடக்கு மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதில் பேசிய சமக நிறுவனர் சரத்குமார்: சாதி பாகுபாடு இல்லாத சமத்துவத்தை தமிழகத்தில் உருவாக்குவதே கட்சியின் கொள்கை என்றும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடனும், அதே நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் . வாக்குகளைப் பெறுவதற்காக பணம் கொடுப்பது வாடிக்கை ஆகி விட்ட நிலையில், வாக்குகளை பணத்துக்காக விற்பனை செய்து விடக்ககூடாது.

இதற்காக உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் புதிதாக மாற்றங்கள் வேண்டும் என்றால் வாக்காளர்கள் வாக்ளிக்க பணம் பெறக்கூடாது. அதிமுக கூட்டணியில் சமக தொடர்ந்து  நீடித்து வருகிறது என்றார் சரத்குமார்.இந்நிகழ்ச்சியில் மண்டல அமைப்பாளர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Top