04/Jan/2021 06:07:19
புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை கூட்டுறவு அங்காடியில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு
தொகுப்பு மற்றும் தலா ரூ.2500 வீதம் ரொக்கம் வழங்கும் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று பொங்கல் பரிசை வழங்கி பேசியதாவது:தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கத்தினை வழங்க உத்தரவிட்டு, இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதன்படி தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்பமும்பயன்பெறும் வகையில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை,20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு நல்ல துணிப்பை வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா
ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை மிகச்சிறப்பாக கொண்டாட முடியும்.
அதனடிப்படையில் விராலிமலை கூட்டுறவு அங்காடியில் 1134 குடும்பஅட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.2500 மொத்தம் ரூ..28.35 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலுப்பூர்
கூட்டுறவு அங்காடியில் 803 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அன்னவாசல் கூட்டுறவு அங்காடியில் 886 குடும்ப அட்டைதாரர்களுக்கும் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அர்பன் கூட்டுறவு அங்காடியில் 1192 குடும்ப அட்டைதாரர்களுக்கும் திருமயம் கூட்டுறவு அங்காடியில் 1431 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழையூர் கூட்டுறவு அங்காடியில்
1301 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் தலா ரூ.2500 ரொக்கமும் வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 1024 நியாயவிலைக் கடைகளில் உள்ள 4,64,142 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சிறப்புபொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.116.03 கோடி ரொக்கமும் வழங்கப்படுகிறது.
மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலேயே பொருட்களை பெறும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 எண்ணிக்கையில் நடமாடும் நியாயவிலைக்கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பொங்கல் பண்டிகையைசிறப்பாக கொண்டாட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித்தலைவர் இரா.சின்னத்தம்பிரூபவ் மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.பழனியாண்டி,ஒன்றியக்குழுத்;தலைவர் வி.ராமசாமி, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.