28/Mar/2021 10:37:52
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை. முத்துராஜா துக்கோட்டை நகராட்சியிலும் ஒன்றியப்பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை புதுக்குளம் அருகிலுள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தி்ல் காலை 8 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளுக்குச்சென்று அப்பகுதி மக்களிடம் இத்தேர்தலில் கதாநாயகனாக வர்ணிக்கப் படும் திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பிற்பகலில் புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட மூக்கம்பட்டி, சம்பட்டிவிடுதி, ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ- ரா.சு. கவிதைப்பித்தன், மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.