30/Dec/2020 08:30:23
புதுக்கோட்டை, டிச: பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்லரி வெளியிட்ட தகவல்: மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் மூலம் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பார்வையற்ற மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி பயிலும்;, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி கள் கைப்பேசி பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற, பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள, குடும்ப அட்டை, ஆதார் அட்;டை, பணிச்சான்று (கல்லூரிபயில்பவராயின் படிப்புச்சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதொழில் புரிபவராயின் சுயதொழில்புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம் 2 போன்ற ஆவணங்களுடன் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 8.1.2021 -தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04322-223678 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.