logo
அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: அதிமுக தலைமை அறிவிப்பு

அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: அதிமுக தலைமை அறிவிப்பு

12/Nov/2020 01:23:27


சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

 அஇஅதிமுகவின் கழக  அமைப்புச் செயலாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக ஆர். கமலக்கண்ணன் மற்றும் இணைச் செயலாளராக சி.கே. துளசிதாஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் செயலாளராக கா.சங்கரதாஸ் மற்றும் இணைச் செயலாளராக எ நூர்ஜஹான், கழக வழக்குரைஞர்  பிரிவு இணை செயலாளர்களாக சி.திருமாறன் மற்றும் எஸ். செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்னர்.


Top