logo
ஜி கே வாசன் பிறந்தநாள் விழா: தமாகா வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

ஜி கே வாசன் பிறந்தநாள் விழா: தமாகா வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

28/Dec/2020 05:48:52

ஈரோடு டிச:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் தமாகாவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பெருந்துறை ரோட்டில் உள்ள மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில் கேட்டு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் செங்கோடன் பள்ளத்தில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கேக் வெட்டி 100 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

 ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் மசூதியில் சிறப்புத் தொழுகையும் நடத்தப்பட்டது. கேகே நகரில் உள்ள என் எல் கருணை இல்லத்தில் உள்ள 200 முதியவர்களுக்கு கேக் வெட்டி அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சிகளுக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை  வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் அன்னதானம் வழங்கினார். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் கேக் வெட்டினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சந்திரசேகர் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.

Top