logo
சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு

03/Dec/2020 08:19:46

சென்னை:சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பாமகவினர் 20 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2,700 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்களத்துாரில் ரயில் மற்றும் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை அண்ணாசாலையில் மன்றோ சிலை, பெரியார் சிலை மற்றும் எழும்பூரிலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட 850 பேரை கைது செய்தனர்.

மேலும், அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி மற்றும் ஏ.கே. மூர்த்தி உள்பட 850 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 188 (அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 269 (சட்ட விரோதமாக செயல்படுதல்) மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரப்புதல் (பிரிவு 3) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Top