logo
சமூக இடைவெளியுடன் ஈரோட்டில் 34 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு:3,605 மாணவர்கள் பங்கேற்பு

சமூக இடைவெளியுடன் ஈரோட்டில் 34 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு:3,605 மாணவர்கள் பங்கேற்பு

28/Dec/2020 07:58:35

ஈரோடு, டிச: தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு தேர்வுத் துறை சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு 10 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-1 பிளஸ்-2 படிப்பதற்காக மாதந்தோறும் ரூ.1,250 -ம்,  கல்லூரி மேற்படிப்புக்கு மாதம் ரூ.2 ஆயிரமும்  கல்வி உதவித்தொகையாக அரசு வழங்கி வருகிறது.இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு  ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும்  நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்காக ஈரோடு , பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி ஆகிய 5  கல்வி மாவட்டங்களில் 34 மையங்க ள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தத் தேர்வை 10 -ஆம் வகுப்பு படிக்கும் 8 மாற்றுத் திறனாளிகள் உள்பட 3605 மாணவ, மாணவிகள் எழுதினர்.

ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 10 மையங்களும், கோபியில் 6, பவானியில் 8, பெருந்துறை 3, சத்தியமங்கலம் 7 என 34 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  தேர்வு காலை சரியாக 9 மணிக்கு தொடங்கியது. மதியம் 1.30  மணிக்கு நிறைவடைந்தது.

முன்னதாக கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந் தன. தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

 பள்ளி நுழைவாயிலுக்கு வந்ததும் அவர்களது கையில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களது உடல் வெப்ப நிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. தேர்வு அறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன

Top